ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

இங்கிலாந்து பிரதமரின் அழைப்பை ஏற்று வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய, ஜி - 7 அமைப்பின் மாநாடு, ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள, 'ஜி - 7' மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் வாயிலாக பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com