பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரை

பிரதமர் மோடி இன்று காணொலி காட்சியின் மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரை
Published on

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை இன்று துவங்குகிறது. நவராத்திரி விழாவையொட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி துர்கா பூஜை வாழ்த்து செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் மூலம் உரையாற்றுவதை மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நேரடியாக ஒளிபரப்ப, அந்தந்த மாநில பா.ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 78,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, ஒவ்வொன்றிலும் 25-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களையும், வாக்காளர்களையும் திரட்ட ஏற்பாடு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com