

புதுடெல்லி,
இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கை பிரதமராக மீண்டும் ராஜபக்சே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது பிராந்திய ஒத்துழைப்பு, இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கக் கூடும் எனத்தெரிகிறது.