ரூ.11,000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்


ரூ.11,000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
x

இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் 17-ந்தேதி(நாளை) நடைபெறும் நிகழ்ச்சியில், 2 பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பிரதமர் நரேந்திர மோடி, நாளை மதியம் 12.30 மணியளவில் டெல்லி ரோகிணியில் நடைபெறும் விழாவில் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இதன்படி துவாரகா விரைவுச்சாலையின் டெல்லி பிரிவு மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை-II (UER-II) திட்டம், அலிபூர்-திச்சான் கலான் நகர்ப்புற விரிவாக்க சாலை-II (UER-II) திட்டம், மற்றும் ரூ.5,580 கோடி மதிப்பிலான பகதூர்கர், சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் கூடிய திட்டங்கள் ஆகியவை தொடங்கி வைக்கப்பட உள்ளன.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story