3-வது அலை: ஆக்சிஜன் இருப்பு- உற்பத்தி, அதிகரிப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் உற்பத்தி, அதிகரிப்பு குறித்து உயர்மட்ட குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
3-வது அலை: ஆக்சிஜன் இருப்பு- உற்பத்தி, அதிகரிப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
Published on

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டடு உள்ளது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,07,52,950 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 911. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,05,939 -ஆக உயர்ந்துள்ளது.

தொற்றுநோயின் மூன்றாவது அலை பற்றிய மத்தியில் பிரதமர் மோடி இது தொடர்பாக பல கூட்டங்களை நடத்தி வருகிறார்.

ஏப்ரல்-மே மாதங்களில் இரண்டாவது கொரோனா அலையின் உச்சகட்டத்தில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ள நிலையில், அதன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் அதிகரிப்பது மற்றும் கிடைப்பது குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை கூட்டி உள்ளார். 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com