ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்: நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் பிரதமர் மோடி பதில் அளிக்கிறார்


ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்: நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் பிரதமர் மோடி பதில் அளிக்கிறார்
x
தினத்தந்தி 23 July 2025 7:31 PM IST (Updated: 23 July 2025 7:35 PM IST)
t-max-icont-min-icon

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன, இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடைபெறும் என்றும், மக்களவையில் 16 மணிநேரமும், மாநிலங்களவையில் 9 மணிநேரமும் விவாதத்துக்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்திற்குப் பிறகு இது குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டது.

இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறைமந்திரி அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பதிலளிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரம் இது குறித்து விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதால் அடுத்த வாரத்துக்கு இந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story