

லக்னோ,
பாரதீய ஜனதா கட்சியை நிறுவியவரும் மறைந்த முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது.
லக்னோவில் உள்ள அவரது சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். லக்னோவில் அமையவுள்ள வாஜ்பாய் மருத்துவ பல்கலை கழகத்துக்கும், பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டவுள்ளார். இதையொட்டி, லக்னோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.