4 நாட்கள் பயணமாக இங்கிலாந்து, மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி

மாலத்தீவு நாட்டின் 60வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கிறார்.
4 நாட்கள் பயணமாக இங்கிலாந்து, மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி
Published on

டெல்லி,

பிரதமர் மோடி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து, மாலத்தீவு செல்கிறார். முதல் நாடாக வரும் 23ம் தேதி இங்கிலாந்து செல்கிறார். இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இங்கிலாந்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.

2 நாட்கள் இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்தப்பின் பிரதமர் மோடி 25ம் தேதி மாலத்தீவு செல்கிறார். 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார். மேலும், மாலத்தீவு நாட்டின் 60வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கிறார். மாலத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 3வது பயணம் இதுவாகும்.

4 நாட்கள் இங்கிலாந்து, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 26ம் தேதி மாலை டெல்லி திரும்புகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com