3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் - ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்...!

சைப்ரஸ் பயணத்தை முடித்துகொண்டு பிரதமர் மோடி கனடா செல்கிறார்.
3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் - ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்...!
Published on

டெல்லி,

பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். அவர் பயணத்தின் முதல் நாளாக நாளை டெல்லியில் இருந்து புறப்பட்டு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் செல்கிறார். நாளை சைப்ரஸ் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு தலைநகர் நிகோசியாவில் அந்நாட்டு ஜனாதிபதி கிறிஸ்டோடியுலசை சந்திக்கிறார். பின்னர், அந்நாட்டு தொழில் அதிபர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

சைப்ரஸ் பயணத்தை முடித்துகொண்டு 16ம் தேதி பிரதமர் மோடி கனடா செல்கிறார். கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டபின் 18ம் தேதி ஐரோப்பிய நாடான குரோஷியா செல்கிறார். அந்நாட்டி ஜனாதிபதி சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பென்கொவிக்கை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com