பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் பயணம் - அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகிறார்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

அமெரிக்க யூத பேரமைப்புகளின் தலைவர்களுக்கான மாநாடு கடந்த 15-ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரு நாடுகளுக்கும் (இந்தியா-இஸ்ரேல்) இடையே மிக பெரிய அளவில் நட்புறவு உள்ளது. அனைத்து வித ஒத்துழைப்பை பற்றியும் நாங்கள் ஆலோசிக்க இருக்கிறோம் என்றார். தொடர்ந்து அவர், இந்தியா சிறியதொரு நாடு அல்ல. 140 கோடி மக்கள் உள்ளனர். அது மிக பெரிய, சக்தி வாய்ந்த, அதிக பிரபலம் வாய்ந்த நாடு என்று அப்போது குறிப்பிட்டார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, நெசட் என பெயர் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 நாள் பயணத்தில், இருதரப்பு உறவுகள் மற்றும் மண்டல நலன்கள் பற்றி பேச உள்ளார். இது, இஸ்ரேலுக்கான கடந்த 9 ஆண்டுகளில் அவருடைய 2-வது பயணம் ஆகும். 2017-ம் ஆண்டு ஜூலையில் இஸ்ரேலுக்கான அவருடைய முதல் பயணம் அமைந்திருந்தது. இஸ்ரேலுக்கு பயணித்த முதல் பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டு இரு தரப்பிலும் மந்திரிகள் மட்டத்திலான பரஸ்பர பயணம் மேற்கொள்ளப்பட்டு, அதன் உதவியுடன் இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதேபோன்று, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் தொழிற்சாலை என பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் வகையில் இந்தியாவுடன் பாதுகாப்பு அமைச்சக அளவில் டெல் அவிவ் நகரில் கடந்த நவம்பரில், இஸ்ரேலின் கூட்டு பணிக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதனுடன், இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, தொழிற்சாலை மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்த அதே நவம்பரில், ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.

இந்தசூழலில் பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று (புதன்கிழமை) இஸ்ரேல் செல்கிறார். இந்த பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள். காசா நிலவரம் குறித்தும் ஆலோசிக்கிறார்கள். இன்று இரவு, பிரதமர் மோடிக்கு நெதன்யாகு விருந்து அளிக்கிறார். இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோக்கையும் மோடி சந்தித்து பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com