நவம்பர் 5ஆம் தேதி கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி!

வரும் நவம்பர் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் செல்ல உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டேராடூன்,

உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோவில்கள் பிரசித்தி பெற்றவை. அதில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில், குளிர்காலத்தை ஒட்டி அடுத்த மாதம் 6-ந் தேதி மூடப்படுகிறது.

இந்நிலையில் அதற்கு ஒருநாள் முன்னதாக 5-ந் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்ல உள்ளார். அப்போது அவர், ரூ.400 கோடி மதிப்பீட்டிலான கேதார்புரி மறுகட்டுமான திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.

கேதார்நாத்துக்கு பிரதமரின் வருகையை உறுதிப்படுத்திய உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, கோவிலில் வழிபடும் மோடி, கேதார்புரி மறுகட்டுமானப் பணிகளை தொடங்கிவைப்பதுடன், ஆதி சங்கராச்சாரியாரின் சிலை ஒன்றையும் திறந்துவைப்பார் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com