பிரதமர் மோடி 16-ம் தேதி நைஜீரியா பயணம்

17 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி 16-ம் தேதி நைஜீரியா பயணம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:-

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நைஜீரியா செல்கிறார். இந்த 2 நாள் பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். 17 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின் போது, இந்தியா மற்றும் நைஜீரியா இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார்.

தொடர்ந்து நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடமும் அவர் உரையாற்றுகிறார். இதனையடுத்து பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com