

புதுடெல்லி,
குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிக பெரிய அலுவலக இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது சூரத் வைர வர்த்தக மையம். இந்த கட்டிடம் வரும் நவம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உலகின் பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த அமெரிக்காவின் பென்டகனை விட பெரிய கட்டிடமாக சூரத் வைர வர்த்தக மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Narendra Modi (@narendramodi) July 19, 2023 ">Also Read:
இந்நிலையில் சூரத் வைர வர்த்தக மையம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இது இந்தியாவின் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு ஒரு சான்றாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சூரத் வைர வர்த்தக மையம் வைர தொழிலின் ஆற்றல் மற்றும் வளர்ச்சியை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.