மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், மாநில முதல் மந்திரிகளுடன் நாளை (வியாழக்கிழமை) காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையின் போது தடுப்பூசி செலுத்தும் வேகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி விவாதிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com