

மோடி வெற்றி பெறுவார்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பு நடந்த மறுநாள், தேசியவாத காங்கிரஸ்
மூத்த தலைவர் நவாப் மாலிக் பா.ஜனதாவுக்கு எதிராக பெரிய கூட்டணி தேவைப்படுகிறது என்றார்.இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர்- சரத்பவார் சந்திப்பு குறித்து பா.ஜனதாவை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகள் என்ன திட்டம் போட்டாலும், 2024 தேர்தலிலும் பிரதமர் மோடி தான் வெற்றி பெறுவார் என கூறினார்.
வியூகங்கள் வகுத்தாலும்...
மேலும் அவர் கூறியதாவது:-
யார், யாரை சந்திக்க வேண்டும் என எந்த தடைகளும் கிடையாது. எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் அவர்களுக்கு ஏற்ற வகையில் வியூகங்களை அமைக்கலாம். நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், யார் என்ன வியூகங்களை வகுத்தாலும், இன்று மோடி உள்ளார். அவர் தான் 2024-லிலும் இருப்பார். பா.ஜனதா, பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வியூகங்கள் அமைத்தாலும் 2024-ல் பிரதமர் மோடியின் கீழ் தான் புதிய அரசு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.