

புதுடெல்லி,
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அவரது பங்களிப்பு பாராட்டத்தக்கது. அவர் எப்போதும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், அனைத்துத் துறை வளர்ச்சியை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தர பிரதேசத்தின் பிரபலமான மற்றும் விடாமுயற்சியுள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது தலைமையின் கீழ், உத்தர பிரதேசம் நல்லாட்சி, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் பொது நலன் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது.
அவரது அசைக்க முடியாத உறுதி மற்றும் அயராத உழைப்பின் விளைவாக, உத்தர பிரதேசம் இன்று முன்னேற்றம் மற்றும் செழிப்பின் பாதையில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. இறைவன் அவருக்கு சிறந்த ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், பொது சேவைக்கான தொடர்ச்சியான ஆற்றலையும் வலிமையையும் அருளட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.