பாரதீய ஜனதா ஆளும் மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை

பாரதீய ஜனதா ஆளும் மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
பாரதீய ஜனதா ஆளும் மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை
Published on

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின் போது, வளர்ச்சி, சமூக நலப்பணிகள் மற்றும் 2019 மக்களவை தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

13 முதல் மந்திரிகள் மற்றும் 6 துணை முதல் மந்திரிகள் சில அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி , பாஜக ஆளும் மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துவது இது மூன்றாவது தடவையாகும். மக்களவை தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்பது குறித்து மோடியும், அமித்ஷாவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com