

புதுடெல்லி,
புதுடெல்லியில் 4-வது குலோபல் வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
முந்தைய குடும்ப ஆட்சியில் வங்கிகளின் சூழலில் எப்படி அமைந்திருக்கிறது என்பதை வங்கி முறை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். வங்கிகள் குறித்த வழக்குகளில் தற்போதைய அரசு கடந்த 3 மாதங்களில் 2,700க்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளது.
கடந்த ஆட்சியில் 59 கிராமங்கள் மட்டுமே ஆப்டிக்கல் பைபர் கேபிள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆப்டிக்கல் பைபர் கேபிள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகாலத்திற்கு முன்னர் இருப்பதை காட்டிலும் தற்போது இந்தியாவின் பொருளாதார குறிக்கோள் 5 டிரில்லியான நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.