யாஸ் புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி அரசு துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
யாஸ் புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை
Published on

புதுடெல்லி,

கிழக்கு-மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 26-ந் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த புயலுக்கு யாஸ் எனவும் பெயரிடப்பட்டு உள்ளது.இந்த புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியுள்ளது.

இதையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com