உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி...!

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தது நம்பமுடியாத அனுபவமாக இருந்ததாக பிரதமர் மோடி கூறினார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி...!
Published on

பெங்களூரு,

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ளது. இதனிடையே, பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்துள்ளார்.

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த அனுபவம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தேஜஸ் விமானத்தில் வெற்றிகரமாக பயணத்தை முடித்துவிட்டேன். இந்த பயண அனுபவம் நம்பமுடியாததாக இருந்தது. நமது நாட்டின் உள்நாட்டு திறன் மீதான என் நம்பிக்கையை தேஜஸ் விமானப்பயணம் மேலும் அதிகரித்துள்ளது. மேலும், இந்த பயணம் நமது நாட்டின் திறனை பற்றிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு கொடுக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com