உ.பி.யில் பஸ்- லாரி மோதலில் பலியான குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் பஸ்- லாரி மோதலில் பலியான 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.யில் பஸ்- லாரி மோதலில் பலியான குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் நேற்று காலை 8 மணியளவில் ஒரு தனியார் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com