பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்..!! - மத்திய பிரதேச மந்திரி கருத்து

காங்கிரசின் அராஜகங்களுக்கு முடிவு கட்ட பிறந்த கடவுளின் அவதாரம், மோடி என்று மத்திய பிரதேச மந்திரி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

போபால்,

பா.ஜனதா ஆளும் மத்தியபிரதேசத்தில் வேளாண் துறை மந்திரியாக இருப்பவர் கமல் படேல். அவர் ஹர்தா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு எப்போதெல்லாம் சிக்கலில் இருக்கிறதோ, கொடுங்கோன்மை தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் கடவுள் மனித உருவில் அவதாரம் எடுப்பார் என்று நமது மதமும், கலாசாரமும் சொல்கின்றன. அப்படித்தான், ராமபிரான் மனிதராக பிறந்து ராமராஜ்யம் அமைத்தார். ராவணனையும், இதர தீய சக்திகளையும் வீழ்த்தி மக்களை பாதுகாத்தார். கம்சனின் அட்டூழியம் அதிகரித்தபோது, கிருஷ்ணர் மனிதராக பிறந்து அவனுக்கு முடிவு கட்டினார்.

அதுபோல், காங்கிரசின் அராஜகங்கள் அதிகரித்து, ஊழல், சாதியம் தலைதூக்கி, கலாசாரம் அழிக்கப்பட்டு, எங்கும் நம்பிக்கையின்மை நிலவியபோது அதற்கு முடிவுகட்ட நரேந்திர மோடி பிறந்தார். அவரது தலைமையின் கீழ் இந்தியா உலகத்துக்கே குருவாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஊழலற்ற அரசை கொடுத்து வருகிறார். மக்கள் நலனை உறுதி செய்துள்ளார். இவையெல்லாம் சாதாரண மனிதனால் செய்ய முடியாதவை. அப்படி முடிந்திருந்தால், கடந்த 60 ஆண்டுகளில் செய்யப்பட்டு இருக்கும். எனவே, மோடி, ஒரு அவதார புருஷன். கடவுளின் அவதாரம் என்று அவர் கூறினார்.

இதுபோல், மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பழங்குடியின வீரர் தான்டியா பீல்லின் அவதாரம் என்று கமல் படேல் கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com