ராமர் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்; பிரதமர் மோடி

அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டும் அல்ல..இந்திய கலாசாரமும் கூட என்று பிரதமர் மோடி பேசினார்.
ராமர் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்; பிரதமர் மோடி
Published on

அயோத்தி,  

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா முடிந்த பிறகு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒட்டு மொத்த தேசமே ராமர் கோவில் திறப்பை தீபாவளி போல கொண்டாடுகிறது. யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றி அல்ல. கண்ணியமாக கிடைத்த வெற்றி. அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டும் அல்ல..இந்திய கலாசாரமும்கூட.

ராமர் கோவிலுக்காக பாடுபட்ட கரசேவகர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ராம் என்பது யாரையும் எரிக்கும் ஆற்றல் அல்ல.சக்தியை கொடுக்கும் ஆற்றல். ராமர் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். பகவான் ராமர் நமக்கான வழிகளை காட்டுவார்.

ராமர்தான் பாரத தேசத்தின் ஆதாரம். ராமர் கோவில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோவிலை கட்ட  வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரது மனதிலும் இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவிலை கட்டியதற்காக மக்கள் எங்களை நினைவுகூர்வார்கள். யாரையும் குறைவாக எடை போடக் கூடாது.ராமர் பாலத்திற்கு அணில் செய்த உதவி மிகப்பெரியது " இவ்வாறு அவர் பேசி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com