ஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தெலுங்கனா மாநிலம் மியாப்பூர்-நாகோல் இடையே மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலத்தின் இரட்டை நகரங்களான ஐதராபாத்-செகந்திராபாத்தில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது. தனியார் நிறுவனத்துடன் மாநில அரசு இணைந்து ரூ.15 ஆயிரம் கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது.

முதல் கட்டமாக மியாப்பூர்-நாகோல் இடையே 30 கி.மீ தூரம் உள்ள மெட்ரோ பணிகள் முடிவடைந்துள்ளது. இதன் தொடக்க விழா ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த விழா தெலுங்கான முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் முன்னிலையில் பிரதமர் மோடி மதியம் 2.15 மணி அளவில் கலந்து கொண்டு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இந்த ரெயில் சேவை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். இந்த ரெயிலில் சுமார் 330 பேர் பயணிக்க முடியும். பயணிகளிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இரவு 11 மணி வரை ரெயில் சேவை நீட்டிக்கப்படும். குறைந்த கட்டணம் 2.கி.மீ வரை ரூ.10, 26 கி.மீ .க்கு மேல் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும் என மாநில தகவல் தொழில் நுட்பம் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.டி.ராமராவ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com