ஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமான பணியை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமான பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமான பணியை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணியை, இன்று காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். ஆக்ராவின் 15வது பட்டாலியன் பிஏசி அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்தரா ஆகிய சுற்றுலாத் தலங்களை, ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் இரு வழித்தடங்களில் 29.4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம், ஆக்ரா நகரின் 26 லட்சம் மக்களுக்கும், ஆண்டு தோறும் ஆக்ராவுக்கு வருகை தரும் 60 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கும் பயனளிக்கும். வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா நகருக்கு, இந்த மெட்ரோ ரயில் திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவு போக்குவரத்தை அளிக்கும். ரூ.8,379.62 கோடி மதிப்பிலான இத்திட்டம், 5 ஆண்டுகளில் நிறைவடையும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com