உலக சுகாதார தினம்: மக்களுக்கு மோடி வாழ்த்து

உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #ModiWishes #WorldHealthDay
உலக சுகாதார தினம்: மக்களுக்கு மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

உலகமெங்கும் இன்று சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுகாதார தின வாழ்த்துகளை தெரிவித்து குறுஞ்செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மனிதனின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைவதே நல்ல ஆரோக்கியம் தான். உலக சுகாதார தினமான இன்று, நீங்கள் அனைவரும் சிறந்த ஆரோக்கியத்தில் இருக்கவும், புதிய உயரங்களை தொட்டு வளர்ச்சி பெறவும் நான் விரும்புகிறேன்.

உலக சுகாதார நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அடிப்படை கருத்தான அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் உலக சுகாதார பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற கருத்தை நான் வரவேற்கிறேன். சுகாதாரத்திற்கான தேடலே எங்களை ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்னும் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை உருவாக்க வழிவகுத்தது எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com