பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது- பிரதமர் மோடி டுவிட்

ஆகஸ்ட் 14- ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது- பிரதமர் மோடி டுவிட்
Published on

புதுடெல்லி,

ஆகஸ்ட் 14- ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது. மக்களைப் பற்றி கவலைப்படாத வெறுப்பு மற்றும் வன்முறையால் பல லட்சக்கணக்கான எங்கள் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடம்பெயர்ந்தனர்,

தங்கள் உயிரிழந்தனர். நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14- ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com