"நாட்டை சீரழிக்கும் வேலையிழப்பு பிரச்சினையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்" - ராகுல் காந்தி

இந்தியாவில் வெறுப்பும், வளர்ச்சியும் ஒருசேர நிகழ சாத்தியமில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
"நாட்டை சீரழிக்கும் வேலையிழப்பு பிரச்சினையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்" - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் வர்த்தகத்தை நிறுத்திய சர்வதேச நிறுவனங்கள் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் வளர்ச்சியும், வெறுப்பும் ஒருசேர நிகழ சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

இந்திய சூழலால் 7 சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவை விட்டு சென்றுவிட்டன. 9 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 649 டீலர்ஷிப்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 84,000 பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

2017ம் ஆண்டு செவ்ரோலெட் வெளியேறியது. 2018-ல் மேன் டிரக்ஸ் வெளியேறியது. 2019-ல் ஃபியாட் மற்றும் யுனைட்டெட் மோட்டார்ஸும், 2020-ல் ஹார்லி டேவிட்ஸனும், 2021-ல் ஃபோர்டும், 2022-ல் டாட்ஸன் நிறுவனமும் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளன.

மோடி அவர்களே, இந்தியாவில் வெறுப்பும், வளர்ச்சியும் ஒருசேர நிகழ சாத்தியமில்லை. இந்தியாவை சீரழிக்கும் வேலையிழப்பு பிரச்சனையில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com