

புதுடெல்லி,
பிரதமர் மோடி மனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, பண்டிகை காலம், உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்குதல், கொரோனா தொற்று என பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினர். தொடர்ந்து, தமிழகத்தின் தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
வணக்கம் நல்லா இருக்கீங்களா? என பேசிய பிரதமர் மோடி, நூலகம் நடத்தும் யோசனை எப்படி வந்ததும் எனவும் கேட்டறிந்தார். அவரிடம் பேசும்போது ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசி பிரதமர் மோடி அசத்தினார்.