செப். 2-ந் தேதி பிரதமர் மோடி மங்களூரு வருகை

பிரதமர் மோடி வருகிற 2-ந் தேதி கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு வருகிறார்.
செப். 2-ந் தேதி பிரதமர் மோடி மங்களூரு வருகை
Published on

பெங்களூரு,

பிரதமர் மோடி வருகிற 2-ந் தேதி கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு வருகிறார். அன்றைய தினம் மதியம் அவர் மங்களூருவுக்கு வருகிறார். குலூரில் உள்ள கோல்ட்பின்ச் நகருக்கு சென்று கப்பல் துறைமுகத்தில் மேம்படுத்தப்பட்ட சரக்கு கையாளும் பிரிவை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும் அவர், ஒருங்கிணைந்த பெட்ரோல்-சமையல் கியாஸ் பிரிவு, மொத்த பெட்ரோல், எண்ணெய் தேக்கும் வசதி, எண்ணெய் கிடங்கு வசதி, எண்ணெய் சுத்திகரிப்பு, குலையில் மீன்வள துறைமுக மேம்பாடு ஆகிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கடல்நீரில் இருந்து உப்பு நீக்கும் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அதன் பிறகு அவர் அன்றைய தினம் மாலையில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com