ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி நாளை வருகை

பிரதமர் மோடி நாளை (அக்.19) ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்கிறார்.
ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி நாளை வருகை
Published on

புதுடெல்லி,

ஷீரடி சாய்பாபா, விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100-வது சமாதி தினத்தை முன்னிட்டு அக்டேபர் 1ம் தேதி முதல் 18ம் தேதி இன்று வரை சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், சாய்பாபா மகாசமாதி நிறைவு தினமான நாளை சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இந்த நிறைவு நாள் பூஜையில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நாளை ( அக்.19) ஷீரடி செல்கிறார். பின்னர், பக்தர்களின் வசதிக்காக ஷீரடியில் புதிதாக கட்டப்படவுள்ள மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அங்கு நடக்க உள்ள நிகழ்ச்சியில் சாய்பாபா உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை வெளியிடுகிறார். மேலும், அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை ஏழை மக்களுக்கு வழங்குகிறார். கடந்தாண்டு சாய்பாபாவின் மகாசமாதி தின பூஜையில் ஜனாதிபதி ராம்நாத் கேவிந்த் கலந்து கெண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக பிரதமர் மேடியின் வருகையை ஒட்டி ஷீரடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆளில்லா விமானம் டிரேன் மூலம் முக்கிய சாலைகள், தெருக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com