

புதுடெல்லி,
சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறி விடலாம் என்று யேசிப்பதாக பிரதமர் மேடி பதிவிட்ட நிலையில், நே சார் என்ற ஹாஸ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. தெடர்ந்து சமூக வலைத்தளத்தில் நீடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மேடிக்கு நே சார் என்ற ஹாஸ்டேக் மூலம் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, சமூக ஊடகங்களான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிரம், யூடியூப் போன்றவற்றில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருவதாக பிரதமர் மோடி, தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அவரை டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பின்தொடர்ந்து வருபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.