பி.எம்.சி. வங்கி விவகாரம்: நிர்மலா சீதாராமனுக்கு வங்கி ஊழியர் சங்கம் கடிதம்

பி.எம்.சி. வங்கி விவகாரம் தொடர்பாக, நிர்மலா சீதாராமனுக்கு வங்கி ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
பி.எம்.சி. வங்கி விவகாரம்: நிர்மலா சீதாராமனுக்கு வங்கி ஊழியர் சங்கம் கடிதம்
Published on

ஐதராபாத்,

மராட்டியத்தில் இயங்கி வந்த பி.எம்.சி. வங்கியில் நடந்த கடன் மோசடி காரணமாக, கடன் வழங்குதல் மற்றும் சேமிப்பு பெறுவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளது. மேலும் அதன் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பி.எம்.சி. வங்கி தொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க செயலாளர் வெங்கடாசலம் கடிதம் எழுதியுள்ளார். அதில், பி.எம்.சி. வங்கியின் வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் என்பதால் தங்கள் நல்வாழ்வுக்கான சேமித்த தொகையை எடுக்க முடியாமல் அவதிப்படுவதாக கூறியுள்ளார். எனவே இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளை (6 மாதத்தில் ரூ.40 ஆயிரம்) நீக்க வேண்டும் எனவும், இந்த வங்கியை ஏதாவது ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்குமாறும் கேட்டுக்கொண்டு உள்ளார். மராட்டியம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் தீவிர பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com