பீகாரில் உள்ள அனைத்து பெண்களும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர் - பிரதமர் மோடி

பீகாரில் உள்ள அனைத்து பெண்களும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர் என 3வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
பீகாரில் உள்ள அனைத்து பெண்களும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர் - பிரதமர் மோடி
Published on

பாட்னா

பீகார் சட்டமன்ற தேர்தலில் 3- வது கட்ட தேர்தலுக்க்கான் பிரசாரம் நடந்து வருகிறது போர்பெஸ்கஞ்ச் பேரணியில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும் பீகார் மக்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துகின்றனர்.

பீகார் மக்கள் ஜனநாயகத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பது பெருமைக்குரிய விஷயம், அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயையும் மீறி வாக்களிக்க அதிக எண்ணிக்கையில் முன்வருகின்றனர். தேர்தலை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக இரவும் பகலும் உழைத்த தேர்தல் ஆணையம் மற்றும் பாதுகாப்பு படையினரை நான் பாராட்டுகிறேன்.

பாரதிய ஜனதா ஏழைகளுக்கு உண்மையான அர்த்தத்தில் வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ளது. பீகாரின் அனைத்து சமூக மக்களும் தங்களுக்கு விருப்பமான ஒரு தலைவரை தேர்வு செய்ய உரிமை உண்டு. பீகாரில் உள்ள அனைத்து பெண்களும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். "அனைத்து பெண்களும் மோடிக்கு வாக்களிக்க உறுதியாக உள்ளனர், ஏனெனில் தற்போதைய அரசாங்கம் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை உறுதி செய்துள்ளது.

கடந்த தசாப்தம் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதாக இருந்தது, ஆனால் இந்த தசாப்தம் அனைத்து அபிலாஷைகளையும் நிறைவேற்றும் என கூறினார்.

மூன்று கட்டத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை பிரதமர் மோடி சீமஞ்சலில் உள்ள ஃபோர்பெஸ்கஞ்சிலும், கோசியில் சஹர்சாவிலும் முடிப்பார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com