

புதுடெல்லி,
முன்னாள் பிரதமர்களும், அவர்களுடைய மந்திரிசபை சகாக்களும் வருமான வரி செலுத்தியதில் இருந்து திரும்பப் பெற்ற தொகை (ரீபண்ட்) குறித்த விவரங்களை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அந்த தகவல்கள், பிரதமர் அலுவலகம் பராமரிக்கும் பதிவேடுகளில் இல்லை என்று பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.
தற்போதைய பிரதமர் மோடி வருமான வரி செலுத்தியதில் இருந்து திரும்பப் பெற்ற தொகை குறித்தும் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால், அது தனிப்பட்ட தகவல் என்பதால், அதை தெரிவிப்பதில் இருந்து தகவல் பெறும் உரிமை சட்டம் விலக்கு அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.
இருப்பினும், பிரதமர் மோடி கடந்த 18 ஆண்டுகளில் 5 தடவை ரீபண்ட் பெற்றுள்ளதாக வருமான வரித்துறை இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.