டெல்லியில் பிரதமர் அலுவலகம் புதிய வளாகத்திற்கு மாற்றம்

சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் புதிய பிரதமர் அலுவலகம் கட்டப்பட்டது.
டெல்லி,
தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டம் என்ற திட்டத்தின்கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், துணை ஜனாதிபதி இல்லம், மத்திய அரசு அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் சுமார் 78 ஆண்டுகளாக பிரதமர் அலுவலகம் ஜனாதிபதி இல்லம் அருகே உள்ள தெற்கு வளாகத்தில் செயல்பட்டு வந்தது. சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் புதிய பிரதமர் அலுவலகம் கட்டப்பட்டது. நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் அலுவலகம் இன்று முதல் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சேவா தீர்த் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள புதிய வளாகத்திற்கு பிரதமர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் மகர சங்கராந்தி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் இன்று முதல் பிரதமர் அலுவலகம் புதிய வளாகத்திற்கு மாறியுள்ளது.






