அறிவாற்றல், கணினி சார்ந்த கல்வியறிவை மேம்படுத்துவதே பிரதமரின் நோக்கம் - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

அறிவாற்றல், கணினி சார்ந்த கல்வியறிவை மேம்படுத்துவதே பிரதமர் மோடியின் நோக்கம் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
அறிவாற்றல், கணினி சார்ந்த கல்வியறிவை மேம்படுத்துவதே பிரதமரின் நோக்கம் - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
Published on

புதுடெல்லி,

இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் சார்பில், டெல்லியில் தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தரம் நடைபெற்றது. இதில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

அதில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:-

மின்னணுவியல் மற்றும் பிபிஓ பிரிவில் எதிர்வரும் 2 ஆண்டுகளில் 10 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதில் மின்னணுவியல் துறையில் மட்டும் 2.5 முதல் 3 மில்லியன் வேலைவாய்ப்புகளும், பிபிஓ பிரிவில் 8 மில்லியன் வேலைவாய்ப்புகளும், எதிர்வரும் 2 ஆண்டுகளில் கூடுதலாக உருவாக்கப்படும்.

இதனை ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சாத்தியமாக்கும். இதனால்தான், மத்திய அரசு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

அறிவாற்றல், கனிணி சார்ந்த கல்வியறிவு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் அம்சம். தகுதி, திறமை மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆரோக்கியமான சூழலை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com