பொருளாதாரம் வீழ்ச்சி,வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு- ராகுல் காந்தி விமர்சனம்

கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
பொருளாதாரம் வீழ்ச்சி,வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு- ராகுல் காந்தி விமர்சனம்
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்றும் திட்டமிடப்படாத ஊரடங்கு ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாகவும் மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடரந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் 2020-21- நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி -7.3 சதவிகிதமாக இருப்பதாகவும் நேற்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில்,ஜிடிபி வீழ்ச்சி குறித்து ராகுல் காந்தி பிரதமரை கடுமையாக சாடியுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி அடைந்துள்ளது, இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இது பிரதமரின் அவமானம் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் வேலைவாய்ப்பின்மை எவ்வளவு அதிகரித்துள்ளது என்ற வரைபடம் ராகுல் காந்தி இணைத்து வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com