பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து

பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலில் கான்பூரை சேர்ந்த சுபம் திவிவேதி என்பவர் பலியாகி உள்ளார்.
பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்று (வியாழக்கிழமை) ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்தார்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமரின் இன்றைய கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலில் கான்பூரை சேர்ந்த சுபம் திவிவேதி பலியானதால், அந்த துக்கத்தில் பங்கேற்கும் விதமாக அங்கு எந்த ஒரு கொண்டாட்டமும் நடைபெறாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com