கேரளாவில் தனிமைப்படுத்தலை மீறிய மாணவர்கள் - போலீசார் தேடுகின்றனர்

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சென்ற மாணவர்கள் தனிமைபடுத்துதலை மீறியதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளாவில் தனிமைப்படுத்தலை மீறிய மாணவர்கள் - போலீசார் தேடுகின்றனர்
Published on

கோட்டயம்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட திருவள்ளூரில் இருந்து வாளையார் சோதனைச்சாவடி வழியாக கேரள மாநிலம் கோட்டயத்துக்கு 34 மாணவர்கள் சென்றுள்ளனர். அவர்களில் 4 பேர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், மற்ற 30 பேர் எந்த தகவலையும் தெரிவிக்காமல் தனிமைப்படுத்தலை மீறி அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களை தேடி கண்டுபிடிக்க சுகாதாரத்துறை போலீசாரின் உதவியை நாடியுள்ளது. போலீசாரும் அவர்கள் 30 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களையும் சேர்த்து மொத்தம் 117 மாணவர்கள் அந்த சோதனைச் சாவடி வழியாக கேரளா வந்துள்ளனர். மற்றவர்கள் அங்குள்ள திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களும் மாவட்ட நிர்வாகங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறப் படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com