நடிகர் தர்ஷன் தற்கொலை முயற்சி? - கர்நாடக சிறைத்துறை விளக்கம்

தனது தீவிர ரசிகரான ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நடிகர் தர்ஷன் தற்கொலை முயற்சி? - கர்நாடக சிறைத்துறை விளக்கம்
Published on

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தகவலை கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் பிரிவின் காவல்துறை இயக்குநர் அலோக் குமார் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக பரவும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. அப்படி எந்தவொரு அசம்பாவித சம்பவமும் சிறை வளாகத்திற்குள் நடைபெறவில்லை. தர்ஷன் நலமாக உள்ளார். எனவே, ரசிகர்களும் பொதுமக்களும் இதுபோன்ற வதந்திகளை நம்பி பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read
பெட்ரோல், டீசல் விலை உயர்வு; தவணை முறையில் ஏன் கொல்கிறீர்கள்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
நடிகர் தர்ஷன் தற்கொலை முயற்சி? - கர்நாடக சிறைத்துறை விளக்கம்

தனது தீவிர ரசிகரான ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com