ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம்; ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வெடிபொருட்களை வாங்கியுள்ளனர்
ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம்; ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் ஆந்திரா உளவுத்துறையுடன் இணைந்து தெலுங்கானா உளவுத்துறை நடத்திய விசாரணையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். விசாகப்பட்டினத்தை சேர்ந்த சிராஜ் ஐதராபாத்தை சேர்ந்த சமீர் ஆகிய 2 பயங்கரவாதிகளும் ஐதராபாத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

சவுதி அரேபியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்த இருவரும் அங்கிருந்து வந்த உத்தரவு அடிப்படையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வெடிபொருட்களை வாங்கியுள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இரு பயங்கரவாதிகளிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com