சித்தூர்: 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்..! மரத்தில் கட்டி வைத்து அடி உதை..!

சித்தூர் அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சித்தூர்: 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்..! மரத்தில் கட்டி வைத்து அடி உதை..!
Published on

ஆந்திரா:

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தார் அப்போது அங்கு வந்த 46 வயது உடையவர் சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அங்கு சிறுமியை வன்கொடுமை செய்த நபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு அழைத்துச்சென்று குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com