அரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி; ராகுல்காந்தி கண்டனம்

அரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி; ராகுல்காந்தி கண்டனம்
Published on

சண்டிகார்:

அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கர்னலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்னலின் கராண்டா சுங்கச்சாவடி அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டனர் நடத்தினர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதை தொடர்ந்து விவசாயிகளின் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அரியானா முழுவதும் சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது.

போராட்டம் குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா தர்ஷன் பால் கூறியதாவது:-

அமைதியாக போராட்டம் நடந்த போதிலும் விவசாயிகள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.

பாரதிய கிசான் யூனியனின் அரியானா தலைவர் குர்ணம் சிங் சாதுனி கைது செய்யப்பட்ட அனைவரையும் அரியானா போலீசார் விடுவிக்கும் வரை சாலை மறியல் போராட்டம் தொடரும் என் கூறி உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இந்தியில் "மீண்டும், விவசாயிகளின் இரத்தம் சிந்தி உள்ளது. இது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com