ஒடிசாவில் நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவலர் கைது

ஒடிசாவில் கைதிக்கு ஜாமீன் வழங்க நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசாவில் நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவலர் கைது
Published on

பெர்காம்பூர்,

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சூரிய நாராயணன் பெகரா. இவர் மீது புகுடா கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூரிய நாராயணன், தனது உறவினரான பாபுலா பெகரா ஒரு கொலை முயற்சி வழக்கில் கைதானபோது, அவருக்கு ஜாமீன் பெறுவதற்காக, நீதிபதி ஒருவரின் கையொப்பத்தை மோசடியாக பயன்படுத்தி உள்ளார்.

அவர் ஜாமீன் விண்ணப்பத்தை தாக்கல் செய்தபோது, சம்பந்தப்பட்ட நீதிபதி விடுப்பில் இருப்பதும், அவரது கையெழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதியின் கையெழுத்தை மோசடி செய்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மீது, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com