பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பெங்களூரு போலீஸ் முதல் கைது நடவடிக்கை

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் கைது நடவடிக்கையை போலீஸ் எடுத்து உள்ளது. #GauriLankeshMurder
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பெங்களூரு போலீஸ் முதல் கைது நடவடிக்கை
Published on

பெங்களூரு,

பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலர் கவுரி லங்கேஷ் 6 மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டும், பிற தகவல்களை கொண்டும் போலீஸ் விசாரணை நடத்தியது. நீண்ட நாட்களாக எந்தஒரு நகர்வும் இல்லாமல் விசாரணை நீடித்தது. கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என தகவல்கள் வெளியாகியது.

விசாரணை தொடர்பாக விசாரிக்கும் போலீஸ் துணை ஆய்வாளர் எம் என் அனுசேத், கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நவீன் குமார் என்பவர் சட்டத்திற்கு விரோதமாக ஐந்து தோட்டாக்கள் வைத்திருந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம் என்பதை மட்டும் தெரிவித்த அனுசேத் மேற்கொண்டு எதுவும் கூற மறுத்து விட்டார். இந்நிலையில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் கே.டி.நவீன் குமார் (37) முக்கியப் பங்காற்றியது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவரை சிறப்பு புலனாய்வுக்குழு கைது செய்து உள்ளது. கைது செய்யப்பட்டவர் மேற்கொண்ட விசாரணைக்கு 5 நாட்கள் காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com