காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த காவல் அதிகாரி மரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவல் அதிகாரி மரணம் அடைந்து உள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த காவல் அதிகாரி மரணம்
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் ரஷீத் தார் என்ற காவல் அதிகாரி படுகாயமடைந்து உள்ளார்.

இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com