போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

முதுகுவலியால் அவதிப்பட்டதால் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மைசூரு;

மைசூரு மாவட்டம் சாமுண்டிமலை அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மஞ்சேகவுடா. இவர் கர்நாடக மாநில போலீஸ்படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறா. இவரது மனைவி ஜோதி (வயது 47). இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத முதுகு வலி இருந்து வந்துள்ளது.

இதனால் பயங்கரமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வலி போகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜாதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி மஞ்சேகவுடா இரவு சாப்பிட்டு விட்டு பணிக்கு சென்றுள்ளார்.

அப்போது ஜோதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் பணிமுடிந்து வீட்டிற்கு வந்த மஞ்சேகவுடா, தன் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த நஜர்பாத் போலீசார், ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com