திருமணம் செய்வதாக கூறி பெண் போலீஸ்காரர் பலாத்காரம்

திருமணம் செய்வதாக கூறி பெண் போலீஸ்காரர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
திருமணம் செய்வதாக கூறி பெண் போலீஸ்காரர் பலாத்காரம்
Published on

பெங்களூரு:

பெங்களூரு தென்கிழக்கு மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போலீஸ் நிலையம் ஒன்றில் 28 வயது இளம்பெண் ஒருவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். அதே போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு சென்ற போலீஸ்காரர், அவரை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே பெண் போலீஸ் கர்ப்பமானார். உடனே அவர் இதுகுறித்து போலீஸ்காரரிடம் தெரிவித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். அப்போது போலீஸ்காரர் திருமணத்துக்கு மறுத்ததுடன் அவரை லத்தியால் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த பெண் போலீஸ்காரர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com