பரபரப்பாகும் அரசியல் களம்: இடைத்தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை தட இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
பரபரப்பாகும் அரசியல் களம்: இடைத்தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்
Published on

புதுடெல்லி,

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அசாமி்ல் உள்ள 1 நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் சஞ்சீவ் குமார் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பின்வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

1. தமிழ்நாடு, தொகுதி எண் - 35, மதுராந்தகம் (SC) சட்டமன்றத் தொகுதி, திருமதி. மரகதம் குமரவேல் அவர்களின் ராஜினாமா (காலிப்பணியிடத்திற்கான காரணம்)

2. தொகுதி எண் - 101, தாராபுரம் (SC) சட்டமன்றத் தொகுதி, திருமதி. பி. சத்யபாமா அவர்களின் ராஜினாமா

3. புதுச்சேரி, தொகுதி எண் - 09, தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி திரு. என். ரங்கசாமி அவர்களின் ராஜினாமா

4. மேற்கு வங்கம் தொகுதி எண் - 70, ரெஜி நகர் சட்டமன்றத் தொகுதி, திரு. ஹுமாயூன் கபீர் அவர்களின் ராஜினாமா

5. தொகுதி எண் - 210, நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி, திரு. சுவேந்து அதிகாரி அவர்களின் ராஜினாமா

6. அசாம், தொகுதி எண் - 09, நாகோன் நாடாளுமன்றத் தொகுதி, திரு. பிரத்யுத் போர்தோலோய் அவர்களின் ராஜினாமா

இடைத்தேர்தலுக்கான அட்டவணை இணைப்பு-I இல் இணைக்கப்பட்டுள்ளது.

1. வாக்காளர் பட்டியல் (ELECTORAL ROLLS)

தூய்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலே சுதந்திரமான, நியாயமான மற்றும் நம்பகமான தேர்தலுக்கு அடித்தளம் என்று ஆணையம் உறுதியாக நம்புகிறது. எனவே, இதன் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1950 இன் பிரிவு 14 இல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, ஒரு ஆண்டில் வாக்காளராகப் பதிவு செய்ய நான்கு தகுதி தேதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநிலங்களில் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை ஆணையம் நடத்தியது.

மாநிலத்தின் பெயர் தொகுதி எண் மற்றும் பெயர் சட்டமன்ற/நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலின் இறுதி வெளியீட்டுத் தேதி

தமிழ்நாடு, தொகுதி எண் - 35, மதுராந்தகம் (SC) சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியலின் இறுதி வெளியீட்டுத் தேதி - 23.02.2026

தொகுதி எண் - 101, தாராபுரம் (SC) சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியலின் இறுதி வெளியீட்டுத் தேதி - 23.02.2026

புதுச்சேரி, தொகுதி எண் 09, தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியலின் இறுதி வெளியீட்டுத் தேதி - 14.02.2026

மேற்கு வங்கம், தொகுதி எண் - 70, ரெஜி நகர் சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியலின் இறுதி வெளியீட்டுத் தேதி - 28.02.2026

தொகுதி எண் - 210, நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியலின் இறுதி வெளியீட்டுத் தேதி - 28.02.2026

அசாம், தொகுதி எண் - 09, நாகோன் நாடாளுமன்றத் தொகுதி, வாக்காளர் பட்டியலின் இறுதி வெளியீட்டுத் தேதி - 10.02.2026.

இருப்பினும், மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, மனுத்தாக்கல் முடிவடையும் கடைசி தேதி வரை வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் செயல்முறை தொடரும்.

2. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை தட இயந்திரங்கள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை தட இயந்திரங்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. போதுமான எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை தட இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், இவ்இயந்திரங்களின் உதவியுடன் வாக்குப்பதிவை சுமூகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3. வாக்காளர்களின் அடையாளச் சான்று

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) வாக்காளரின் முதன்மை அடையாள ஆவணமாகும். இருப்பினும், வாக்குச்சாவடியில் பின்வரும் அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையும் காண்பிக்கலாம்:

1. ஆதார் அட்டை

2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அட்டை (MGNREGA Job Card)

3. வங்கி/அஞ்சலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம் (Passbook)

4. தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை / ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை

5. ஓட்டுநர் உரிமம் (Driving License)

6. பான் அட்டை (PAN Card)

7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (NPR) கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் (RGI) வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை

8. இந்திய கடவுச்சீட்டு (Passport)

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10. மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை

11. நாடாளுமன்ற உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள்/சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்;

12. மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID Card - மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்)

4. தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தொகுதியின் முழுப் பகுதியோ அல்லது ஒரு பகுதியோ அடங்கியுள்ள மாவட்டத்தில் (அல்லது மாவட்டங்களில்), தேர்தல் ஆணையத்தின் 02.01.2024 தேதியிட்ட கடித எண் 437/6/INST/ECI/FUNCT/MCC/2024/(BYE-ELECTIONS)-ல் (தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்) உள்ள அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும்.

5. குற்றப் பின்னணி பற்றிய தகவல்கள்

குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பிரச்சார காலத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் வழியாக மூன்று முறை இதுகுறித்த தகவல்களை வெளியிட வேண்டும். குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சியும், தனது வேட்பாளர்களின் குற்றப் பின்னணி பற்றிய தகவல்களைத் தனது இணையதளத்திலும், நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களிலும் மூன்று முறை வெளியிட வேண்டும்.

வாக்காளர்கள் இத்தகைய வேட்பாளர்களின் பின்னணியைப் பற்றி தெரிந்துகொள்ளப் போதுமான கால அவகாசம் கிடைக்கும் வகையில், குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கால அவகாசம் பின்வருமாறு மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தனது 16 செப்டம்பர், 2020 நாளிட்ட கடித எண் 3/4/2019/SDR/Vol. IV மூலம் உத்தரவிட்டுள்ளது:

1. வேட்புமனுவைத் திரும்பப்பெற நிர்ணயிக்கப்பட்ட நாளிலிருந்து முதல் 4 நாட்களுக்குள்.

2. அடுத்த 5 முதல் 8 நாட்களுக்குள்.

3. 9ஆம் நாளிலிருந்து பிரச்சாரத்தின் கடைசி நாள் வரை (வாக்குப்பதிவுத் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை).

(விளக்கம்: வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஒரு மாதத்தின் 10ஆம் தேதி என்றும், வாக்குப்பதிவு 24ஆம் தேதி என்றும் இருந்தால், முதல் அறிவிப்பு 11 மற்றும் 14ஆம் தேதிகளுக்கு இடையிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அறிவிப்புகள் முறையே 15 மற்றும் 18ஆம் தேதிகளுக்கு இடையிலும், 19 மற்றும் 22ஆம் தேதிகளுக்கு இடையிலும் வெளியிடப்பட வேண்டும்.)

இந்த நடைமுறையானது மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் 2015ஆம் ஆண்டின் ரிட் மனு (C) எண் 784 மற்றும் 2011ஆம் ஆண்டின் ரிட் மனு (சிவில்) எண் 536 ஆகியவற்றின் தீர்ப்பின் படி மேற்கொள்ளப்பட வேண்டியது ஆகும்.

அரசியல் கட்சிகள், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளரைத் தேர்வு செய்த 48 மணி நேரத்திற்குள், அவரைத் தேர்வு செய்ததற்கான விவரங்கள் மற்றும் காரணங்களை நாளிதழ்கள், தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் மற்றும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதுகுறித்த விரிவான விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள 11.01.2022 நாளிட்ட கடித எண் 3/4/2021/SDR/Vol.III-இல் இடம்பெற்றுள்ளன. இந்தத் தகவல்கள் ECINET- செயலியில் ‘Know Your Candidates’ (உங்கள் வேட்பாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்) என்ற தலைப்பிலும் கிடைக்கும்.

6. நிலுவை இன்மை சான்றிதழ்

தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் அரசால் வழங்கப்பட்ட குடியிருப்பில் வசித்த வேட்பாளர்கள், அக்குடியிருப்பு தொடர்பான (அ) வாடகை, (ஆ) மின்சாரக் கட்டணம், (இ) குடிநீர்க் கட்டணம் மற்றும் (ஈ) தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றை நிர்வகிக்கும் முகமைகள், அதிகார அமைப்புகள் அல்லது துறைகளிடமிருந்து "நிலுவைத் தொகை ஏதுமில்லை என்பதற்கான சான்றிதழைப்" (No dues certificate) பெற விரும்பினால், அதற்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் 03.05.2024 நாளிட்ட ஆணையத்தின் கடித எண் 3/ER/2023/SDR/Vol.IV-இல் இடம்பெற்றுள்ளன; இவை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் கிடைக்கின்றன.

இடைத்தேர்தலுக்கான அட்டவணை

தேர்தல் நிகழ்வு நாள் / கிழமை

அரசிதழ் அறிவிக்கை வெளியீட்டு தேதி 09.09.2026 (புதன்கிழமை)

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 16.09.2026 (புதன்கிழமை)

வேட்புமனு பரிசீலனை நாள் 17.09.2026 (வியாழக்கிழமை)

வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 19.09.2026 (சனிக்கிழமை)

வாக்குப்பதிவு நாள் 06.10.2026 (செவ்வாய்க்கிழமை)

வாக்கு எண்ணிக்கை நாள் 09.10.2026 (வெள்ளிக்கிழமை)

தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாள் 11.10.2026 (ஞாயிற்றுக்கிழமை)

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com